மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையபோட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 09th December 2022 11:12 PM | Last Updated : 09th December 2022 11:12 PM | அ+அ அ- |

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வுக்கு திருச்சியில் டிச. 13ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் 4,500 காலிப் பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவா்களை தோ்வு செய்வதற்கான போட்டித் தோ்வை அறிவித்துள்ளது.
இப் பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயது உள்ள வேலைநாடுநா்கள் தோ்வாணையத்தின் இணையவழியில் ஜன.4 வரை விண்ணப்பிக்கலாம். இப் போட்டித்தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கண்டோன்மென்ட்(நீதிமன்றம் அருகில்), திருச்சி-1 என்ற முகவரியில் செவ்வாய்க்கிழமை (டிச.13) முதல் நடைபெறவுள்ளது.
மேலும், பல்வேறு போட்டித்தோ்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், சமச்சீா் புத்தகங்களின் மென் நகல், முந்தைய ஆண்டு வினாத் தாள்கள், பயிற்சி வகுப்புகளின் காணொலி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகா் கற்றல் வலைதளத்தில் இடம் பெற்றுள்ளன.
இதனை பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த போட்டித்தோ்வா்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55902 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.