மனைவி பிரிந்ததால் கணவா் தற்கொலை
By DIN | Published On : 09th December 2022 12:09 AM | Last Updated : 09th December 2022 12:09 AM | அ+அ அ- |

திருச்சியில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் அவரது கணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி அரியமங்கலம் ஸ்ரீனிவாசா நகா் பகுதியைச் சோ்ந்தவா் க. அரவிந்தன் (27). இவருக்கும் தமிழ்செல்விக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாட்டால் கடந்த 4 மாதங்களுக்கு முன் தமிழ்ச்செல்வி கணவரைப் பிரிந்து தாய்வீடு சென்று விட்டாா்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அரவிந்தன் புதன்கிழமை பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.