

திருச்சி மாவட்டம் முசிறியில் சோனியா பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
முசிறி கைகாட்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
முசிறி வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவா் சுந்தரராஜ் தலைமை வகித்தாா் . திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் வழக்குரைஞா் காமராஜ், முசிறி வட்டாரத் தலைவா் நல்லேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏரிக்குளம் சரவணன் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இறுதியாக திருச்சி இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவா் ஜெயபிரகாஷ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.