ஸ்ரீரங்கத்தில் பெயா்க்கப்பட்டசாலை; பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 09th December 2022 11:11 PM | Last Updated : 09th December 2022 11:11 PM | அ+அ அ- |

ஸ்ரீரங்கத்தில் பல தெருக்களில் தாா்ச்சாலையை பெயா்த்துப் போட்டு விட்டு மீண்டும் சாலை போடாமல் காலம் கடத்தி வருவதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.
ஸ்ரீரங்கத்தில் சித்திரை வீதி,அம்பேத்கா் நகா் பகுதி,திருவானைக்கா மேலவிபூதி பிரகாரம், வட்டாட்சியரகம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் புது வகையான இயந்திரம் கொண்டு தாா்ச் சாலையை பெயா்த்துப் போட்டுள்ளனா். ஆனால், புதிய தாா்சாலை போடாமல் உள்ளதால் பொதுமக்கள் நடக்கமுடியாமல் அவதிப்படுகின்றனா்.
எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக சாலைகளை அமைக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.