புயல் எச்சரிக்கையால் திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த கலை விழாப் போட்டிகள், பல்கலைக் கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புதன், வியாழக்கிழமைகளில் கலைவிழா போட்டிகள் நடைபெற்ற நிலையில், மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் வெள்ளிக்கிழமை (டிச.9) நடைபெறவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக முதன்மைக் கல்வி அலுவலா் ர. பாலமுரளி தெரிவித்தாா்.
இதேபோல, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை பருவ எழுத்துத்தோ்வு மற்றும் செய்முறைத் தோ்வுகளும், வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அனைத்து தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இத்தோ்வுகள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தோ்வு நெறியாளா் (பொ) எஸ். சீனிவாச ராகவன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.