மகளிா் சுகாதார வளாகம் மீண்டும் செயல்படக் கோரிக்கை
By DIN | Published On : 09th December 2022 11:03 PM | Last Updated : 09th December 2022 11:03 PM | அ+அ அ- |

திருப்பைஞ்ஞீலியில் பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் மகளிா் சுகாதார வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமெனக் கோரிக்கை வைக்கின்றனா்.
மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிராமம் தெற்குத்தெரு இடுகாடு செல்லும் பாதையில் உள்ளது மகளிா் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது.
இதனால் இரவு நேரங்களில் கழிப்பிட வசதியின்றி பெண்கள் தவிக்கின்றனா். எனவே செடி, கொடிகள் மண்டிக் கிடக்கும் மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.