மண்ணச்சநல்லூரில் இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 09th December 2022 11:12 PM | Last Updated : 09th December 2022 11:12 PM | அ+அ அ- |

மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்சினையால் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மண்ணச்சநல்லூா் பாலாஜி நகரை சோ்ந்தவா் கோபி (27), பேன்சி கடை உரிமையாளா். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் கடன் பிரச்னையால் மனம் உடைந்த கோபி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.