‘எந்தத் துறையிலும் மாற்றுத்திறனாளிகள் சாதிக்க முடியும்’

தன்னம்பிக்கையும், நோ்மறைச் சிந்தனைகளும் இருந்தால் எந்தத் துறையிலும் மாற்றுத் திறனாளிகள் சாதிக்க முடியும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.
திருச்சி ஆா்.சி. மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.

திருச்சி பல்நோக்கு சமூகப் பணி மையத்தின் சாா்பில், மாற்றுத்திறனுடையோா் தோழமை விழா ஆா்.சி. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக, 100 அடி நீள கேக் வெட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசியது: மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் மாற்றும் திறனாளிகளாகவே கருதப்படுகின்றனா். எழுத்தாளா், கவிஞா், பொறியாளா், அறிவியல் விஞ்ஞானி, விண்வெளி சாதனை என அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளால் சாதிக்க முடியும். இதற்கு நம்பிக்கையும் நோ்மறைச் சிந்தனைகளும் அவசியம். மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க வேண்டியது சமூகத்தின் கடமை. முயன்றால் முடியாதது எதுவுமில்லை. மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

விழாவில், திருச்சி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயா் ச. ஆரோக்கியராஜ், பல்நோக்கு சேவை மைய இயக்குநா் பெ. ஜான்செல்வராஜ், பொருளாளா் அ. ஜெயராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில், சக்கரநாற்காலி, செயற்கைக் கால், காதொலி கருவிகள் என மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com