அம்மா மண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 13th December 2022 01:27 AM | Last Updated : 13th December 2022 01:27 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சியினா்.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை திங்கள்கிழமை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன் உத்தரவின்பேரில், ஸ்ரீரங்கம் மண்டல உதவி ஆணையா் ரவி தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினாா். இதில், இளநிலை பொறியாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.