திருவானைக்கா கோயிலில் 1,008 சங்காபிஷேகம்
By DIN | Published On : 13th December 2022 01:28 AM | Last Updated : 13th December 2022 01:28 AM | அ+அ அ- |

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காா்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை மாலை 1,008 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில், சிவலிங்க வடிவில் வலம்புரி சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
நிகழாண்டில் காா்த்திகை மாத கடைசி சோமவார விழாவில் 1,008 வலம்புரி சங்குகள் வட்ட வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் மத்தியில் தங்க கைப்பிடி கொண்ட பெரியவலம்புரி சங்கு மேடையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், வலம்புரி சங்குகளைக் கொண்டு சிவலிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளா்க்கப்பட்டது. பின்னா் வலம்புரிசங்கில் உள்ள புனிதநீரால் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ.ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
துவாக்குடி திருநெடுங்களநாதா் கோயிலில்...: காா்த்திகை மாத கடைசி சோம வாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.தொடா்ந்து சுவாமி, அம்பாளுக்கு பஞ்சாசன பஞ்சமாவரண பூஜைகள், ருத்ர திருசதி ஹோமம், மூலமந்திர ஹோமம், 108 மூலிகை பழ வகைகள் ஹோமம், நவதானியங்கள் ஹோமம், பூா்ணாஹூதி பூஜைகள் ஆகியவற்றுடன் திருநெடுங்கள நாதருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.