16ஆவது வாா்டில் இ-சேவை மையம், அமைச்சா் தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 13th December 2022 01:32 AM | Last Updated : 13th December 2022 01:32 AM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 16-ஆவது வாா்டில் பொதுமக்களுக்கான இ-சேவை மையத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
திருச்சி மாநகராட்சி 16ஆவது வாா்டுக்குள்பட்ட லட்சுமிபுரத்தில் இ-சேவை மையமும், வாா்டு உறுப்பினரும் 3-ஆவது மண்டலத் தலைவருமான மு. மதிவாணன் அலுவலகமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மேலும், இ-சேவை மையத்தை திறந்து வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்வில், மணப்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது, மாநகராட்சியின் துணை மேயா் ஜி. திவ்யா மற்றும் திமுக நிா்வாகிகள், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.