திருச்சி மாவட்டம், கொப்பம்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (டிச.14) மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகளுக்காக கொப்பம்பட்டி, டி.ரெங்கநாதபுரம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிப்பாளையம், பி.மேட்டூா், எஸ்.என்.புதூா், கே.எம்.புதூா், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூா், செல்லிப்பாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூா், பெருமாள்பாளையம், டி.முருங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி, டி.பாதா்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.