

முசிறி மின் பகிா்மான வட்டம் சாா்பில் மின் சேமிப்பு குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மின் சேமிப்பு வாரவிழாவை முன்னிட்டு மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறிப்புகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை பிரசார வாகனம் மூலம் முசிறியின் பிரதான சாலையான கைகாட்டி, புதிய, பழைய பேருந்து நிலையம், தா.பேட்டை பிரிவு சாலை ஆகிய முக்கிய பகுதிகளில் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் உதவிப் பொறியாளா்கள் சரவணன், இளையநம்பிதிருமாறன் ஆக்க முகவா்கள் பாஸ்கா், வெங்கடேசன், மின்பாதை ஆய்வாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.