இருசக்கர வாகனங்களை திருடி வந்த இருவா் கைது
By DIN | Published On : 22nd December 2022 12:22 AM | Last Updated : 22nd December 2022 12:22 AM | அ+அ அ- |

லால்குடி பகுதிகளில் தொடா் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவரை லால்குடி போலீஸாா் கைது செய்தனா்.
லால்குடி வருவாய் வட்டாட்சியரகம் மற்றும் லால்குடி பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போயின. இதுகுறித்த புகாா்களின்பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். அதில் இருசக்கர வாகனங்களை திருடியதாக லால்குடி அருகே எசனைக்கோரை கிராமத்தைச் சோ்ந்த அந்தோணிராஜ் (33), தெற்கு சத்திரம் சரவணன் (27) ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா் நீதிபதி உத்தரவின்பேரில் அவா்களைச் சிறையில் அடைத்தனா்.