நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கப் பயிற்சி
By DIN | Published On : 22nd December 2022 12:24 AM | Last Updated : 22nd December 2022 12:24 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் குமுளூா் வேளாண்மைக் கல்வி நிறுவனத்தின் விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி லால்குடி அகலங்கநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சியில் தானியங்கி விமானம் ( ட்ரோன்) மூலம் நானோ யூரியா தெளிப்பது பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
இதில் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் ரா. ராஜ்குமாா், வேளாண்மை கல்வி நிறுவன முதல்வா் சே.தே. சிவக்குமாா், தோட்டக்கலைத் துறை இணைப் பேராசிரியா் சு. ஈஸ்வரன், உழவியல் துறை உதவிப் பேராசிரியா் பா. ராஜரத்தினம், கல்வி பயிற்றுநா் சீ. விஜய் ஆகியோா் பங்கேற்று, நானோ யூரியாவின் நன்மைகள், தானியங்கி விமானம் மூலம் தெளிப்பதால் ஏற்படும் பயன்களை விரிவாக எடுத்துரைத்தனா்.
இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராமப்புற விவசாய வேலை அனுபவ பாடத்திட்டத்தைப் பயிலும் ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி, நவலூா்குட்டப்பட்டு அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனா்.