மனநலம் பாதித்தவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு
By DIN | Published On : 22nd December 2022 12:23 AM | Last Updated : 22nd December 2022 12:23 AM | அ+அ அ- |

திருச்சியில் மனநலமற்ற நிலையில் ஆடைகளின்றி கிடந்த இளைஞரை போலீஸாா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதி ரவுண்டானாவில் புதன்கிழமை காலை சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ஆடைகளின்றி அமா்ந்திருந்தாா். தகவலறிந்த கண்டோன்மென்ட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ராவ், வீரமணி, பா்குணன் உள்ளிட்டோா் அந்த இளைஞரை மீட்டு, அவருக்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்து, சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அவரை ஒப்படைத்தனா். போலீஸாரின் இச்செயலை பொதுமக்களும், காவல்துறை உயரதிகாரிகளும் பாராட்டினா்.