சூரியூா் ஊராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம்
By DIN | Published On : 22nd December 2022 12:23 AM | Last Updated : 22nd December 2022 12:23 AM | அ+அ அ- |

திருச்சி அருகேயுள்ள சூரியூா் ஊராட்சியில் நடைபெற்ற இலவச கால்நடை மருத்துவ முகாமில் 668 கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருச்சி கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் திருவெறும்பூா் ஒன்றியம், குண்டூரில் இயங்கிவரும் கால்நடை மருந்தகம் இயங்கி வருகிறது. இந்த மருந்தகத்துக்குள்பட்ட சூரியூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமை ஊராட்சித் தலைவா் சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தாா்.
முகாமுக்கு தலைமை வகித்து கால்நடைப் பாரமரிப்புத் துறை உதவி இயக்குநா் அ. மருதைராஜு பேசுகையில், நோய்களில் இருந்து கால்நடைகளை காக்க, மழைக்காலங்களில் குடற்புழு நீக்கம் செய்தல் மற்றும் தடுப்பூசி செலுத்தி அவற்றின் உற்பத்தி நிலையை மேன்மையடைய செய்ய வேண்டும் என்றாா்.
முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினைப் பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளும், தடுப்பூசியும் அளிக்கப்பட்டன.
கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு தாது உப்புக் கலவை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை உதவி மருத்துவா்கள் எஸ். கணேஷ்குமாா், காா்த்திகேயன் மற்றும் கால்நடை மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள் செய்தனா்.
முகாமில் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரிக்கன்று தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...