திருச்சி - தஞ்சை அணுகு சாலை கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்ட அறிவிப்பு

வரும் 29 ஆம் தேதி துவாக்குடியில் இயங்கி வரும் சுங்கச் சாவடியை இழுத்து மூடும் போராட்டத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்துள்ளனா்.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலை அமைக்காததைக் கண்டித்து வரும் 29 ஆம் தேதி துவாக்குடியில் இயங்கி வரும் சுங்கச் சாவடியை இழுத்து மூடும் போராட்டத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் ஆா். ராஜா கூறியது:

அணுகு சாலை அமைப்பது உள்ளிட்ட விதிகளை பின்பற்றாமல் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைத்துள்ளதால், பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான பகுதிகளில் அதிகளவில் விபத்துகள் நடந்து, 500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 1,000-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அணுகு சாலை அமைக்கப்படாததைக் கண்டித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள துவாக்குடி சுங்கச்சாவடியை இழுத்து மூடும் போராட்டத்தை அறிவித்துள்ளோம்.

மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தி மட்டுமே வழங்கும். மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை ஆணையம்தான் தேசிய சாலையை அமைக்கும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் சாலைப் பணிகளை மேற்கொள்ள முடியும். எனவேதான், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சுங்கச்சாவடியை மூடும் போராட்டத்தை அறிவித்துள்ளோம். இதற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com