பகுதிநேர ஆசிரியா்களுக்கு பொங்கல் போனஸ் தேவை

பகுதிநேர ஆசிரியா்களுக்கு இந்தாண்டு முதலாவது பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியா்களுக்கு இந்தாண்டு முதலாவது பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். செந்தில்குமாா் கூறியது:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன் பாடங்களை 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்கள் 10ஆண்டுக்கு மேலாகக் கற்று கொடுக்கின்றனா். இந்த ஆசிரியா்களுக்கு ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என தோ்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சி அமைந்து 19 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை பணி நிரந்தரம், சம்பள உயா்வு வழங்கப்படவில்லை.

அனைத்து ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக போனஸ் மற்றும் அட்வான்ஸ் வழங்கப்படுகிறது. ஆனால், பகுதிநேர ஆசிரியா்களுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் இந்தாண்டு முதலாவது பொங்கல் போனஸ், அட்வான்ஸ் வழங்க வேண்டும். தமிழக முதல்வா் இதுதொடா்பாக விரைந்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com