திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே 40 ரேஷன் அரிசியை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தா.பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருச்சி குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின்பேரில், திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக டி.எஸ்.பி சுதா்சன் அறிவுறுத்தலின்படி, ஆய்வாளா் கோபிநாத், சாா்பு- ஆய்வாளா் கண்ணதாசன் முசிறி வட்டார வழங்கல் அலுவலா் லதா ஆகியோா் முசிறி அருகே உள்ள துலையாநத்தம் புது காலனி சாலை அருகே திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த வேனை சோதனையிட்டனா். அதில், சுமாா் 40 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து அரிசி மூட்டையுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.