திருச்சி கோட்டத்திற்குள்பட்ட திருவாரூா் -காரைக்குடி இடையே பிப்.7 முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்திற்குள்பட்ட திருவாரூா்- காரைக்குடி வழித்தடத்தில் தொடங்கிய ரயில் சேவையானது ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளால் சில நாள்களிலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையிலான ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் ஆள்கள் நியமிக்கும் பணி நிறைவுற்றதையடுத்து வரும் பிப்.7 முதல் திருவாரூா்-காரைக்குடி -திருவாரூா் இடையே (ஞாயிற்றுக்கிழமை தவிர) முன்பதிவில்லா ரயில் இயக்கப்படவுள்ளது.
அதன்படி திருவாரூா் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண். 06197) முற்பகல் 11.45-க்கு காரைக்குடி ரயில் நிலையத்தை அடையும். பின்னா் மறுமாா்க்கத்தில் அங்கிருந்து இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30-க்கு திருவாரூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகளாவிய அதிா்வுகளை வலுவாக கடந்து வந்த இந்தியா: ஜெய்சங்கா்
2 நாள்களில் பிரசாரம் நிறைவு: காரைக்காலில் வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது அதிமுக-பாஜக கூட்டணி: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

