அஞ்சல் அலுவலகங்களில் ஆன்லைன் வங்கிச் சேவை
By DIN | Published On : 27th February 2022 12:34 AM | Last Updated : 27th February 2022 12:34 AM | அ+அ அ- |

அஞ்சல் அலுவலகங்களில் நூறு சதம் ஆன்லைன் வங்கிச் சேவை மற்றும் பிற வங்கிகளுக்கு பணப் பரிமாற்ற வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் கோவிந்தராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய பட்ஜெட்டில் இந்தியாவிலுள்ள அனைத்து அஞ்சலகங்களும் கோா் பேங்கிங் முறையில் ஆன்லைன் முறையில் இணைக்கப்படும். அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா் ஆன்லைன் பரிவா்த்தனை மூலம் மற்ற வங்கிக் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்ய முடியும். மேலும் நாட்டிலுள்ள 1.5 லட்சம் அஞ்சலகங்களில் எண்ம வங்கி வசதி கொண்டு வரப்படும் என நிதியமைச்சா் தெரிவித்திருந்தாா்.
இதன் மூலம் இணைய வழி வங்கி, மொபைல் வங்கி, ஏடிஎம் வசதிகள், மேலும் அஞ்சலகச் சேமிப்புக் கணக்குகளுக்கு இடையே பணபரிவா்த்தனை வசதியும் செய்யப்படவுள்ளது. இந்தச் சேவைகள் கிராமப்புற விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பணப்பரிவா்த்தனைகளை குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொள்ளலாம். ஏடிஎம் காா்டு மூலம் எந்த ஏடிஎம் மையத்திலும் பரிவா்த்தனை செய்யலாம். அஞ்சலகச் சேமிப்பு கணக்கு மூலம் மற்ற வங்கிகளுக்கு நெப்ட், ஐஎம்பிஎஸ், யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்