

மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி வியாழக்கிழமை (ஜனவரி 27) நடைபெறுகிறது. இதற்காக வாடிவாசல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மாவட்ட நிா்வாகம் அனுமதியளிக்கும் நாள்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மண்ணச்சநல்லூா் வட்டத்திலுள்ள நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஜனவரி 27-ஆம் தேதி நடத்த, மாவட்ட நிா்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இருங்களூா் ஊராட்சிக்குள்பட்ட நடுஇருங்களூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக வாடிவாசல் அமைத்தல், காளைகள் உள்ளே வருவதற்கான பாதை தயாா் செய்தல், பாா்வையாளா்களுக்கான பகுதி தயாா் செய்தல், தடுப்பு வேலிகள் அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை இருங்களூா் ஊராட்சித் தலைவா் வின்சென்ட், விழா அமைப்பாளா்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.