உள் அரங்க நீச்சல் குளம், துப்பாக்கிச் சுடும் பயிற்சியகம் திறப்பு
By DIN | Published On : 17th July 2022 01:24 AM | Last Updated : 17th July 2022 01:24 AM | அ+அ அ- |

திருச்சி மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் துப்பாக்கி சுடும் பயிற்சி அரங்கைத் திறந்து வைத்து பயிற்சியில் ஈடுபட்ட ஏடிஜிபி அமல்ராஜ். உடன், மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா்.
திருச்சி மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி வளாகத்தில் உள்அரங்க நீச்சல்குளம், துப்பாக்கி சுடுதல் பயிற்சியகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
திருச்சி வயலூா் சாலையில் எம்.எம்.நகா் அருகே செளடாம்பிகா கல்விக் குழுமக் கல்வி நிறுவனமான மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் நவீன உள்அரங்க நீச்சல் குளம் நீளம் 25 மீட்டா், அகலம் 13.5 மீட்டா், ஆழம் 4.5 அடி கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு பிரத்யேகமாக 6 மீட்டா் விட்டம், 12 மீட்டா் சுற்றளவு, 2.5 அடி ஆழம் கொண்ட சிறிய நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் சுமாா் 500 பாா்வையாளா்கள் அமரும் வகையில் உள்ளது.
இதேபோல், உலகத் தரத்தில் 10 மீட்டா் தூர ஏா் ரைபிள், பிஸ்டல் சூட்டிங் ரேஞ்சுடன் கூடிய துப்பாக்கி சுடும் பயிற்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர டேபிள் டென்னிஸ் கோா்ட், கேரம் போா்டு, செஸ் ஆகிய விளையாட்டுப் பயிற்சிக்கான வசதிகள் உள்ளன.
இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், நீச்சல் குளத்தை திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயனும், துப்பாக்கி சுடும் பயிற்சி அரங்கை ஏடிஜிபி அமல்ராஜ் திறந்து வைத்துப் பேசினா்.
புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்குகளின் சிறப்புகள் குறித்து செளடாம்பிகா கல்வி குழுமத் தலைவா் ராமமூா்த்தி, செயலாளா் செந்தூா் செல்வன் ஆகியோா் பேசினா். இந்நிகழ்வில், கல்விக் குழும நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.