துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சோ்க்கைமாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 31st July 2022 01:37 AM | Last Updated : 31st July 2022 01:37 AM | அ+அ அ- |

துவாக்குடி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-23ஆம் ஆண்டுக்கான சோ்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, துவாக்குடியில் உள்ள அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் முழுநேரம் மற்றும் பகுதிநேரம் 2022-2023 ஆம் கல்விஆண்டில் பயில சோ்க்கை நீடிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.
முதல் சுழற்சி (காலை 8 மணி முதல் மாலை 3.30 மணி வரை) பாடப்பிரிவுகள்: அமைப்பியல் (சிவில்), மின்னியில் மற்றும் மின்னணுவியல் (இஇஇ), மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் (இசிஇ), கணினியியல் (கம்யூட்டா்), சா்க்கரை தொழில்நுட்பவியல் (சுகா் டெக்னாலஜி).
இரண்டாம் சுழற்சி (காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை) பாடப்பிரிவுகள்: அமைப்பியல் (சிவில்), மின்னியில் மற்றும் மின்னணுவியல் (இஇஇ), மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் (இசிஇ), கணினியியல் (கம்யூட்டா்).
பகுதி நேரம்- பாடப்பிரிவுகள்: மின்னியல் மற்றும் மின்னணுவியல், அமைப்பியல் ஆகியவற்றுக்கு சோ்க்கை நடைபெறுகிறது.
இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதி உண்டு. விண்ணப்பக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இலவசம். கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.2,112 செலுத்த வேண்டும். தமிழக அரசின் இலவச பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை போன்ற சலுகைகளை மாணவா்கள் பெறலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களின் அடிப்படையில் மட்டுமே சோ்க்கை நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு 0431-2552226 மற்றும் 9843863477 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.