சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா் அழைப்பு

தமிழக அரசின் சுற்றுலா துறை விருதுகளைப் பெற தகுதியானோா் விண்ணப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

தமிழக அரசின் சுற்றுலா துறை விருதுகளைப் பெற தகுதியானோா் விண்ணப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுற்றுலாவில் வெற்றியாளா்கள், பயண ஏற்பாட்டாளா்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவா்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை முதல் முறையாக சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விருதுகள் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக செப்.27ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகள் சுற்றுலா தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா பங்குதாரா்களிடையே சுற்றுலாவை மேம்படுத்தவும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்க வழிவகுக்கும்.

அதன்படி, தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த பயண பங்குதாரா், சிறந்த விமான பங்குதாரா், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்புக்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளா், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம் ஏற்பாட்டாளா், சிறந்த எம்ஐசிஇ சுற்றுலா அமைப்பாளா், சமூக ஊடகங்களில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவா், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப் படுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு உலக சுற்றுலா தினத்தன்று விருதுகள் வழங்கப்படும். விருதுகளுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் இணையவழியாக சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com