நாகையநல்லூரில்வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
By DIN | Published On : 31st July 2022 01:35 AM | Last Updated : 31st July 2022 01:35 AM | அ+அ அ- |

தொட்டியம் ஒன்றியம், நாகையநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி நி. தியாகராஜன் தொடக்கி வைத்தாா்.
ஊராட்சித் தலைவா் ராமதாஸ், தொட்டியம் ஒன்றிய திமுக செயலா்கள் மேற்கு தங்கவேல், கிழக்கு திருஞானம் மற்றும் அரசு அலுவலா்கள் முகாமில் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...