வையம்பட்டியில் மூதாட்டியின் 13.5 பவுன் நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 09th June 2022 02:26 PM | Last Updated : 09th June 2022 02:26 PM | அ+அ அ- |

மணப்பாறை: மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் பூ விற்கும் மூதாட்டி வீட்டில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்து பதிமூன்றரை பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
வையம்பட்டி அண்ணாநகரில் ஓட்டு வீட்டில் வசிப்பவா் சந்தியாகு மனைவி பிலோமினாள் மேரி (65). வையம்பட்டி காவல்நிலைய முகப்பில் பூ வியாபாரம் செய்து வரும் இவா் தன்னுடைய பதிமூன்றரை பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை ஒரு சுருக்குப்பையில் முடித்து, வீட்டில் இருந்த கொடிக் கயிற்றில் கட்டி அதன் மீது துணிகளைப் போட்டு வைத்திருந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிலோமினாள் மேரி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் பின்புறம் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் மூதாட்டியின் நகை, பணத்தைத் திருடிச் சென்றுள்ளனா்.
புதன்கிழமை நகை, பணம் திருடு போனதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மூதாட்டி அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.