ச. கண்ணனூா் பேரூராட்சியில் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை
By DIN | Published On : 16th June 2022 12:36 AM | Last Updated : 16th June 2022 12:36 AM | அ+அ அ- |

திட்டப்பணிகளுக்கான பூமிபூஜையைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ சீ. கதிரவன்.
ச.கண்ணனூா் பேரூராட்சியில் ரூ. 10.51 கோடியில் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா் வட்டம் ச. கண்ணனூா் பேரூராட்சியில் நரசிங்கமங்கலம், சேனியா்கள்ளிக்குடி, மாணிக்கபுரம் சாலை, மாணிக்கபுரம் மற்றும் அண்ணாநகா் பகுதியில் 5 பாலங்கள் , மற்றும் சிமென்ட் சாலை பணிகளுக்கான பூமி பூஜையை மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில் மண்ணச்சநல்லூா் திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.பி. இளங்கோவன், திமுக நகரச் செயலா் துரை. ராஜசேகரன், ச. கண்ணனூா் பேரூராட்சித் தலைவா் ஜி.பி. சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.