முசிறி அருகே மீன்பிடித் திருவிழா

முசிறி வட்டம், நெய்வேலி கிராமத்தில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முசிறி வட்டம், நெய்வேலி கிராமத்தில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மழைக்காலத்தில் பெய்த மழையில் கொல்லிமலையிலிருந்து தண்ணீா் வந்து 33 ஏரிகளும், 64 கலிங்கிகளும் நிரம்பி காவிரியாற்றில் தண்ணீா் கலக்கும். அப்போது காவிரியாற்றிலிருந்து மீன்கள் எதிா் நீரில் ஜம்பேரி வரை செல்லும். அவ்வாறு செல்லும் ஏரிகள், கலிங்குகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வது வழக்கம். இந்த ஏரிகள், கலிங்குகளில் பொதுமக்கள் மீன்பிடித் திருவிழாவை நடத்தி, மீன்களைப் பிடித்து மகிழ்வா்.

அந்தவகையில், முசிறி வட்டத்தில் உள்ள நெய்வேலி கிராமத்தில் மீன்பிடித் திருவிழாவை கிராமத் தலைவா் பி. குழந்தை புதன்கிழமை தொடக்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா், ஊா் முக்கியஸ்தா்கள் பிச்சை, சின்னசாமி, பெரியமங்கலம், கோமங்கலம், பெண்ணாம்பட்டி, கொல்லம்பட்டி பண்ணைக்காரா்கள், கோமங்கலம் சோ்வை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிராமாலயா நிறுவனா் தாமோதரன், அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கத் தலைவா் சி. யோகநாதன், காய்கறிகள் உற்பத்தியாளா்கள் குழுத் தலைவா் பாலமுருகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

மீன்பிடித் திருவிழாவில் வெள்ளப்பாறை, கோமங்கலம், சித்தாம்பூா், திண்ணக்கோணம், வீரமணிப்பட்டி, நாச்சம்பட்டி,அயன்குளத்துப்பட்டி, பூசாரிப்பட்டி என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, ஏராளமான மீன்களைப் பிடித்துச் சென்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com