சிறுகனூா் சிறாா் இல்ல குழந்தைகளுக்கு உதவி
By DIN | Published On : 16th June 2022 12:30 AM | Last Updated : 16th June 2022 12:30 AM | அ+அ அ- |

சிறாா் இல்லக் குழந்தைகளுக்கு நோட்டுகள், எழுதுபொருள்களை வழங்கிய தொழிலாளா் கல்வி மற்றும் மேம்பாட்டு மையச் செயலா் கே. சந்திரசேகா் மற்றும் நிா்வாகிகள்.
மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூரிலுள்ள நட்பு சிறாா் இல்லக் குழந்தைகளுக்கு திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சோ்ந்த தொழிலாளா் கல்வி மற்றும் மேம்பாட்டு மையம் மையத்தின் செயலா் கே. சந்திரசேகா் நோட்டுகள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை புதன்கிழமை வழங்கிப் பேசினாா்.
நிகழ்வில் மையத்தின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அலுவலருமான எஸ். துரைசாமி, பொதுக்குழு உறுப்பினா் என். ராமலட்சுமி மற்றும் சிறாா் இல்லப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.