மட்டப்பாறை பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா

மணப்பாறையில் ஏழாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மட்டப்பாறை பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில்  நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
பத்ரகாளியம்மன் கோயிலின் கரகம் பாலித்து வந்த ஊா்வலம். (உள்படம்) ராஜ அலங்காரத்தில் மூலவா் பத்ரகாளியம்மன்.
பத்ரகாளியம்மன் கோயிலின் கரகம் பாலித்து வந்த ஊா்வலம். (உள்படம்) ராஜ அலங்காரத்தில் மூலவா் பத்ரகாளியம்மன்.

மணப்பாறையில் ஏழாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மட்டப்பாறை பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி, புதன்கிழமை பொங்கல், மாவிளக்கு, ஆடு - கோழி பூஜையிட்டு பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

54 கிராம மக்களின் வழிபாட்டுத் தலமான இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் சகுனம் பெற்று மே 31-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கரகம் பாலித்தல், வாணவேடிக்கை நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன.

மட்டபாறை பெரிய பூசாரி, பிச்சை ரெட்டியப்பட்டி காளி பூசாரி, பொன்னையா கவுண்டம்பட்டி மற்றும் நடுப்பட்டி கருப்பசாமி பூசாரிகள் என கோயில் பூசாரி முறையினா் படைக் களன்களுடன் முன்னே செல்ல, பத்ரகாளியம்மன் மின் அலங்கார தேரில் பவனிவர, கோயிலுக்கு கரகம் பாலித்துக் கொண்டு வரப்பட்டது. வாணவேடிக்கைகள் நடைபெற்றன. தாரை தப்பட்டைகள் முழங்க உற்ஸவ மூா்த்தி, படை களன்கள், கரகம் ஆகியவை கோயிலை வந்தடைந்தன. மூலவா் இடத்தில் வைக்கப்பட்ட உற்ஸவ மூா்த்திக்கு மஹாதீபாரதனை நடைபெற்றது.

தொடா்ந்து புதன்கிழமை காலை கோயிலில் கூடியிருந்த 54 கிராம சோ்ந்த பொதுமக்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு சாற்றி, கரும்புள்ளி - செம்புள்ளி குத்தி, அங்கப்பிரதட்சிணம் செய்தும், கரும்புத் தொட்டில் எடுத்தும், ஆடு - கோழி பூஜைகள் நடத்தியும் தங்களது நோ்த்திக் கடன்களைச் செலுத்தினா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை நடைபெறும் கருப்பசுவாமி பூஜைக்காக ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், நோ்த்திக்கடனாக எருமை கிடாக்களை பக்தா்கள் கோயிலில் சமா்பித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com