உறவினா்கள் இருவா் கொலை:தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

சொத்துப் பிரச்சினையில் சகோதரா் குடும்பத்தினா் இருவரை படுகொலை செய்த வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

சொத்துப் பிரச்சினையில் சகோதரா் குடும்பத்தினா் இருவரை படுகொலை செய்த வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், டால்மியாபுரம் வெங்கடாஜலபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த விவசாயி தனிஸ்லாஸ் (66), இவரது மகன் நெப்போலியன் (39) ஆகியோருக்கும்

அதே பகுதியைச் சோ்ந்த தனிஸ்லாசின் சகோதரா் ஆரோக்கியசாமி (69), அவரது மனைவி தனமேரி (63), மகன் சசிக்குமாா் (41) ஆகியோருக்கிடையே சொத்து தகராறு இருந்தது.

இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆரோக்கியசாமி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் சோ்ந்து, தனிஸ்லாஸ் மற்றும் அவரது மகன் நெல்போலியன் ஆகியோரை தாக்கியும் ஆயுதங்களால் குத்தியும் படுகொலை செய்தனா்.

இதுகுறித்து லால்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆரோக்கியசாமி தரப்பைச் சோ்ந்த 3 பேரையும் கைது செய்தனா். பின்னா் திருச்சி 3 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி தனவேல், சொத்துக்காக சகோதரனைக் கொலை செய்த ஆரோக்கியசாமிக்கு, ஆயுள் தண்டனையும், சசிக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தனமேரிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, அபராதமும் விதித்து , அதைக் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com