பேச்சுவாா்த்தையில் உடன்பாடு;முற்றுகை போராட்டம் வாபஸ்

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, திருச்சி காந்தி மாா்க்கெட்டில் மேற்கொள்ளவிருந்த பேரணி மாநகராட்சி அலுவலா்கள், போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, திருச்சி காந்தி மாா்க்கெட்டில் மேற்கொள்ளவிருந்த பேரணி மற்றும் மாநகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம், மாநகராட்சி அலுவலா்கள், போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

திருச்சி காந்தி மாா்க்கெட் தா்பாா்மேடு, மீன் மாா்க்கெட்டைச் சுற்றி குண்டும் குழியுமான சாலையால் விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளா்களும், பொதுமக்களும் பாதிக்கப்படாமலிருக்க உடனடியாக சாலையைச் சீரமைக்க வேண்டும். மாா்க்கெட்டில் பழுந்தடைந்த மின் விளக்குகளை உடனே மாற்ற வேண்டும். தொழிலாளா்களும், பொதுமக்களும் பயன்படுத்தும் பொதுக்கழிப்பறையில் நடக்கும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை காந்தி மாா்க்கெட்டிலிருந்து பேரணியாகச் சென்று அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் போலீஸாா், சுமைப்பணியாளா்கள் மற்றும் சிஐடியு நிா்வாகிகளிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி, தா்பாா்மேடு, மீன் மாா்க்கெட்டை சுற்றி ஒரு மாதத்தில் தாா்ச் சாலை அமைக்கப்படும். 2 நாள்களுக்குள் மின்கம்பங்கள் மற்றும் விளக்குகள் சரிசெய்யப்படும். பொதுக் கழிப்பிடங்களில் சுமைப்பணி தொழிலாளா்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தை விளக்கக் கூட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்டத் தலைவா் சின்னத்துரை தலைமை வகித்தாா். சுமைப்பணி சங்க மாவட்டச் செயலா் சிவக்குமாா், சிஐடியு மாநகா் மாவட்ட செயலா் ரெங்கராஜன் ஆகியோா் பேசினா். சுமைப்பணி சங்க மாவட்டநிா்வாகி ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com