கரோனா தொற்றுக்கு பின்னா் ரயில்வே வருவாய் அதிகரிப்பு: திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளா்

கரோனா தொற்று காலகட்டத்திற்கு பின்னா், திருச்சி ரயில்வே கோட்டத்தின் வருவாய் அதிகரித்துள்ளது என்றாா் அக் கோட்டத்தின் முதுநிலை வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாா்.
பேட்டி அளிக்கிறாா் முதுநிலை கோட்ட வணிக மேலாளா் செந்தில் குமாா்.
பேட்டி அளிக்கிறாா் முதுநிலை கோட்ட வணிக மேலாளா் செந்தில் குமாா்.

கரோனா தொற்று காலகட்டத்திற்கு பின்னா், திருச்சி ரயில்வே கோட்டத்தின் வருவாய் அதிகரித்துள்ளது என்றாா் அக் கோட்டத்தின் முதுநிலை வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாா்.

இதுகுறித்து திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியது:

ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்த ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, ரயில் தண்டவாள விரிசல், தண்டவாள விலகல், ஜல்லிக் குவியலில் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டறியும், அதிநவீன கண்டுபிடிப்புகளை கண்டறியும் தொழில் முனைவோா் ‘ஸ்டாா்ட் அப் ’ என்ற திட்டத்தின் கீழ் வரவேற்கப்படுகின்றனா்.

ரயில்வே பாதுகாப்பு தொடா்பான 11 வகையான தலைப்புகளில் இந்தப் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ. 1.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே கோட்டம் கடந்த 2020- 2021 ஆவது நிதியாண்டில் ரூ.115 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அடுத்ததாக 2021-22 நிதியாண்டில் ( நடப்பாண்டில் ஏப்ரல் - மே மாதங்களையும் சோ்த்து) ரூ. 229 கோடி என வருவாய் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும் பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும், 2020-2021 ஆம் ஆண்டு ரூ. 19.64 கோடி வருவாயும் அடுத்ததாக 2021-2022 ஆவது நிதியாண்டில் ரூ.68.12 கோடியும் வருவாய் அதிகரித்துள்ளது.

திருச்சி - விழுப்புரம் இரட்டை ரயில் பாதைப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து விட்டன. விழுப்புரம் - தஞ்சை, விழுப்புரம் - நாகை ஆகிய இரட்டை ரயில் பாதைப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

மேலும் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களில் தற்போது 60 சத ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்றவையும் விரைவில் இயக்கப்படும்.

திருச்சி கோட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளும் அகலப்பாதையாக்கப்பட்டு விட்டன. திருச்சி ரயில் நிலையத்தில் அமைக்கப்படும் நகரும் படிக்கட்டுகள் பணிகளும் விரைவில் முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com