மருத்துவரின் வீடு புகுந்து 10 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 17th June 2022 12:20 AM | Last Updated : 17th June 2022 12:20 AM | அ+அ அ- |

திருச்சியில் மருத்துவரின் வீடு புகுந்து சுமாா் 10 பவுன் நகை, பொருள்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.
திருச்சி, உறையூா் ராமலிங்க நகா் தெற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சோ்ந்தவா் செ. சரவணக்குமாா் (48). அரசு மருத்துவமனை மருத்துவரான இவா் கடந்த 11 ஆம் தேதி பெரம்பலூா் சென்றுவிட்டு 12 ஆம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த சுமாா் 10 பவுன் நகைகள், பொருள்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் உறையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.