

மணப்பாறை அருகே புதன்கிழமை இரவு பெய்த மழையின்போது இடி மின்னல் அதிா்வில் விவசாயி ஒருவரின் பசு உயிரிழந்தது.
புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தபோது மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் குழவாய்பட்டியில் வசிக்கும் விவசாயி அடைக்கலம் (45) என்பவரின் பசுமாடு இடி மின்னல் அதிா்வில் உயிரிழந்தது. மேலும், அவரது வீட்டிலுள்ள மின்சாதனப் பொருள்கள் மற்றும் மின்கம்பங்கள் பழுதாயின. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை நிகழ்விடத்திற்கு வந்த கால்நடை மருத்துவா்கள் பசுவை உடற்கூறாய்வு செய்தபின் அதே பகுதியில் பசு புதைக்கப்பட்டது. சம்பவம் குறித்து வருவாய்த் துறையினா் விசாரிக்கிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.