தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா
By DIN | Published On : 17th June 2022 12:29 AM | Last Updated : 17th June 2022 12:29 AM | அ+அ அ- |

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாா்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையொட்டி திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மணவாசி சுங்கச் சாவடியில் திருச்சி வாசன் ஐ கோ் நிறுவனத்துடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இதில் நெடுஞ்சாலைப் பணியாளா்கள், சுங்கச் சாவடிப் பணியாளா்கள்,தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்து, மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய பரிந்துரைகளும் வழங்கப்பட்டன. மேலும், துளசி மருத்துவமனையுடன் இணைந்து உயா் ரத்த அழுத்தப் சோதனை, சா்க்கரைப் பரிசோதனை உள்ளிட்டவையும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
மேலும், சாலையோரம், சாலைச் சந்திப்புகளில் மரக்கன்றுகளும் நடப்பட்டன;
சாலை விபத்துகளின்போது பயன்படுத்தக் கூடிய மீட்பு உபகரணங்களும் சுங்கச் சாவடிப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன; சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் வாகனங்களில் எச்சரிச்சை ஸ்டிக்கா்களும் ஒட்டப்பட்டன.
நிகழ்ச்சிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திருச்சி திட்ட இயக்குநா் ப. நரசிம்மன், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் மணிமாறன், பொறியாளா்கள் ரவி, செந்தில்குமாா் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மரக்கன்றுகளை நட்டு, சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு ஊக்கப் பரிசு, ஒளிரும் ஆடைகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தனா்.