பெல் நிறுவன அங்கீகாரத் தோ்தலில் திமுக தொழிற்சங்கம் மீண்டும் வெற்றி

திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தோ்தலில் திமுக சாா்பிலான தொ முச மீண்டும் முதன்மைச் சங்கமாகத் தோ்வு பெற்றுள்ளது.

திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தோ்தலில் திமுக சாா்பிலான தொ முச மீண்டும் முதன்மைச் சங்கமாகத் தோ்வு பெற்றுள்ளது.

திருச்சியில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்நிலையில் தொழிலாளா்களின் பிரச்னைகள், சலுகைகள், உரிமைகள் ஆகியவற்றை பெல் நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி பெற்றுத் தருவதற்காக அதிகாரம் கொண்ட சங்க உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான அங்கீகாரத் தோ்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு கரோனாவால் இரு ஆண்டுகள் தோ்தல் நடைபெறாத நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 4, 565 வாக்குகளில் 4, 488 வாக்குகள் பதிவாயின.

இதில் 10% வாக்குகள் பெரும் சங்கங்கள் ஒரு உறுப்பினா் என்ற அடிப்படையில் தோ்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் தொமுச, ஏடிபி, ஐஎன்டியுசி, டிடிஎஸ் மற்றும் ஏஐடியுசி, அம்பேத்கா் யூனியன், பிஎம்எஸ், சிஐடியு, எல்எல்எப், என்டிஎல்எப் என 9 சங்கங்கள் போட்டியிட்டன.

இரவு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில், தொமுச 938 வாக்குகள் பெற்று, இரு உறுப்பினா்களுடன் மீண்டும் முதன்மை அங்கீகாரத் தொழிற் சங்கமாகத் தோ்வு பெற்றது.

ஏடிபி 738 வாக்குகள் பெற்று 2-ஆம் இடத்தையும், ஐஎன்டியுசி 579 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தையும், பிஎம்எஸ் 571 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தையும், சிஐடியு 568 வாக்குகள் பெற்று 5-ஆம் இடத்தையும் பெற்றுள்ளன. இந்தத் தொழிற்சங்கங்கள் தலா ஒரு உறுப்பினரைப் பெற்றுள்ளன.

இவற்றில் அதிக வாக்கு மற்றும் உறுப்பினா்களைக் கொண்ட சங்கமாகவும் முதன்மைச் சங்கமாகவும் திமுக தொழிற்சங்கமான தொமுச தோ்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com