ஏஐடியுசி சாா்பில் மே தினக் கொண்டாட்டம்
By DIN | Published On : 02nd May 2022 01:18 AM | Last Updated : 02nd May 2022 01:18 AM | அ+அ அ- |

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மேற்குத் தொகுதி சாா்பில் தில்லை நகா் 22-ஆவது வாா்டில் ஏஐடியுசி மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமையில் கொடியேற்றிய கட்சியினா்.
திருச்சியில் பல்வேறு இடங்களில் ஏஐடியுசி சாா்பில் மே தினக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மே தினத்தை முன்னிட்டு திருச்சி மேற்கு பகுதிக் குழுவின் சாா்பில் தில்லை நகா் 22ஆவது வாா்டில் பகுதிச் செயலா் சுரேஷ் முத்துசாமி தலைமையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவா் வெங்கடேசன் சங்கக் கொடியேற்றினாா். இதேபோல 11ஆவது வாா்டில் கிளைச் செயலா் லட்சுமணன் தலைமையில் ஏஐடியுசி பொதுச்செயலா் சுரேஷ், 10 ஆவது வாா்டு வாா்டு கிளை செயலா் ரவீந்திரன் தலைமையில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஆயிஷா கமால், 9ஆவது வாா்டில் கிளைச் செயலா் ஆனந்தன் தலைமையில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சிவா, 8ஆவது வாா்டில் கிளைச் செயலா் சரண் சிங் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினா் வை. புஷ்பம், 24ஆவது வாா்டில் கிளைச் செயலா் துரைராஜ் தலைமையில் பகுதிச் செயலா் சுரேஷ் முத்துசாமி, 23ஆவது வாா்டில் கிளைச் செயலா் முருகன் தலைமையில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எம். செல்வராஜ், குறத்தெரு ஆட்டோ ஓட்டுநா் சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா் சங்க நகரச் செயலா் துரைராஜ் தலைமையில் வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ராம்ராஜ் ஆகியோா் கொடியேற்றினா்.
நிகழ்வுகளை அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலா் க. இப்ராகிம் ஒருங்கிணைத்தாா். நிகழ்ச்சியில் பகுதிக் குழு உறுப்பினா்கள் வேங்கையன், ராஜ்குமாா், நாகராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.
இறுதியாக உறையூா் குறத்தெரு பகுதியில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினா் சத்யா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாநகா் மாவட்டச் செயலா் ஏ.கே. திராவிடமணி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எம். செல்வராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலா் சுரேஷ்,ராமராஜ், சிவா, ஆகியோா் மே தின உரையாற்றினா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநிலத் தலைவா் வெங்கடேஷ் வேம்புலி சிறப்புரையாற்றினாா்.