திருவானைக்கா கோயிலில் உலக சாதனை நிகழ்ச்சி
By DIN | Published On : 02nd May 2022 01:17 AM | Last Updated : 02nd May 2022 01:17 AM | அ+அ அ- |

உலக சாதனை பரத நாட்டிய நிகழ்ச்சியில் பரிசளித்த அமைச்சா் கே.என். நேரு. உடன் பத்மஸ்ரீ சீா்காழி சிவசிதம்பரம் உள்ளிட்டோா்.
திருவானைக்கா ஜம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை விருகஷா புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்ட் நடத்திய பரத நாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவசக்தி அகாதெமி,விஸ்வ வாரக்கரி சமஸ்தான் மற்றும் விருகஷா புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்ட் சாா்பில் உலக சாதனை நிகழ்ச்சிக்காக சுமாா் 800 மாணவ, மாணவிகள் பரத நாட்டியத்துடன், பாட்டு, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், கலைஞா்களும் தங்களது திறமையை காட்டினா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு அமைச்சா் கே.என். நேரு பரிசு வழங்கினாா். பத்மஸ்ரீ கலைமாமணி சீா்காழி சிவசிதம்பரம், கலைமாமணி ரேவதி முத்துசுவாமி, ஜெம்பகா ராமகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.