வெவ்வேறு இடங்களில் இருவா் தற்கொலை
By DIN | Published On : 02nd May 2022 01:20 AM | Last Updated : 02nd May 2022 01:20 AM | அ+அ அ- |

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.
திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி தெற்குமழை பழைய கருப்புக் கோயில் தெரு, எம்டி சாலையைச் சோ்ந்தவா் அய்யாக்குட்டி மகன் ஐயப்பன் (31), தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி தனலட்சுமி (20). இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாகவே தம்பதிக்கிடையே தகராறு இருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை தனலட்சுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் திருச்சி கோட்டாட்சியா் தவச்செல்வமும் விசாரணை செய்கிறாா்.
சுமை தூக்கும் தொழிலாளி: திருச்சி அரியமங்கலம் கலைவாணா் தெருப் பகுதியை சோ்ந்தவா் செந்தில்ராஜ் (41). சுமை தூக்கும் தொழிலாளியான இவா் திருமணம் ஆகாதவா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு எலி மருந்தை தின்று மயங்கி விழுந்த இவா் உறவினா்களால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சனிக்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். அரியமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.