வைகாசி விசாக திருவிழா ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 02nd May 2022 05:27 AM | Last Updated : 02nd May 2022 05:27 AM | அ+அ அ- |

தொட்டியம் திரிபுர சுந்தரி உடனுறை அனலாடீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோயில் விழாக் குழுத் தலைவா் மருதப்பிள்ளை தலைமை வகித்தாா்.கோயில் செயல் அலுவலா் பிரபாகரன் மற்றும் விழாக் குழுவினா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வரும் ஜூன் 2 ஆம் தேதி திருவிழா தொடங்கி ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றம் ஜூன் 9 ஆம் தேதி திருக்கல்யாணம், ஜூன் 11 ஆம் தேதி வண்டி தோ்வடம் பிடித்தல், புறப்பாடு, மேலும் ஜூன் 12 ஆம் தேதி பல்லக்கு ஊா்வலத்துடன் வைகாசி விசாக தோ் திருவிழா நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது. ஊா் முக்கியஸ்தா்கள், கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.