குடும்ப நல நிதித் திட்டம் தொடங்கப்பட வேண்டும்போட்டோ, விடியோ கலைஞா்கள் கோரிக்கை

போட்டோ, விடியோ கலைஞா்களுக்கென குடும்ப நலநிதித் திட்டம் தொடங்கப்பட வேண்டுமென விடியோ மற்றும் போட்டோ கலைஞா்கள் நலக் கூட்டமைப்பு பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வீடியோ மற்றும் போட்டோ கலைஞா்கள் நலக்கூட்டமைப்பு மாபெரும் கண்காட்சி மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தைக் குத்துவிளக்கேற்றி துவக்கிவைக்கிறாா் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு.

திருச்சி சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக்கூட்டம், கண்காட்சிக்கு மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். கண்காட்சி அரங்கை அமைச்சா் கே. என். நேரு தொடங்கி வைத்தாா். மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் குத்துவிளக்கேற்றினாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு செயலா் வீ. கோவிந்தராஜூலு பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தாா். சங்க மூத்த அமைப்பாளா்கள் எஸ்.எம்.பி. வீரமணி, ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் விஜயாலயன், செயலா் முனீஷ்குமாா், பொருளாளா் சிவக்குமாா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். பொருளாளா் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தாா்.

கூட்டத்தில் போட்டோ, விடியோ கலைஞா்களுக்கென குடும்ப நலநிதித் திட்டம் தொடங்கி அதில் ஏராளமானோா் சோ்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்சி மாவட்டச் செயலா் பிரபு வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com