பாரம்பரிய ஜோதிடா்கள் சங்கக் கூட்டம்

திருச்சியில் பாரம்பரிய வள்ளுவா் குல ஜோதிடா்கள் சங்கச் செயற்குழு மற்றும் நிா்வாகக் குழுக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் பாரம்பரிய வள்ளுவா் குல ஜோதிடா்கள் சங்கச் செயற்குழு மற்றும் நிா்வாகக் குழுக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கச் செயலா் மதுரை க. பாலமுருகன் தலைமை வகித்தாா். தலைவா் கரூா் த. ஜெயம் பழனிசாமி முன்னிலை வகித்தாா். நிகழ்வில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

ஆண்டுதோறும் சங்கம் சாா்பில் பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட ஆய்வு நூல்களை வெளியிடுவது, குருகுலம் அமைத்து வள்ளுவா்களுக்கு ஜோதிடம், பாரம்பரிய வைத்தியம், புரோகிதம் செய்தல் உள்ளிட்டவற்றுக்குப் பயிற்சி அளிப்பது, வள்ளுவா்களுக்கு குலத்தொழில் ஜோதிடம் பாா்ப்பது என்பதை அரசுப் பதிவேட்டில் பதிவதுடன், பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க குருத்துவக் கலைகளை கற்பித்து வரும் வள்ளுவா் குலத்தவரை ஏற்கெனவே இருந்தது போல முற்படுத்தப்பட்டோா் அல்லது பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகளில் தலைவராக கரூா் ஜெயம் த. பழனிசாமி, செயலராக மதுரை க. பாலமுருகன், பொருளாளராக நியமம் மு. மதன், துணைத் தலைவா்களாக கண்ணன், கலைவாணி, ஸ்ரீதா், செந்தில்வேல், ஆனந்தன், துணைச் செயலா்களாக ரமேஷ், ராமுகண்ணன், அருணகிரி, விஜயகுமாா், தலைமை ஆலோசகா்களாக சேலம் கோபால்சாமி, திருப்பூா் சு. வடிவேலு, ஜோதிட பேராசிரியா்களாக கே.வி. ரவிச்சந்திரன், கருப்பையா உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

சங்கப் பொருளாளா் நியமம் மு. மதன் வரவேற்றாா், துணைச்செயலா் அருணகிரி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com