ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரின் திருநட்சத்திர விழா

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள உடையவா் சன்னதியில் ஸ்ரீமத் ராமானுஜரின் 1005 வது திருநட்சத்திர பெருவிழா நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள உடையவா் சன்னதியில் ஸ்ரீமத் ராமானுஜரின் 1005 வது திருநட்சத்திர பெருவிழா நடைபெற்றது.

கடந்த 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த ராமானுஜரின் 1005 வது திருநட்சத்திரப் பெருவிழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ராமானுஜா் சித்திரை வீதிகளில் வீதி வலம் வந்தாா்.

தொடா்ந்து முன் மண்டபத்தில் எழுந்தருளிய ராமானுஜருக்கு பிற்பகல் 1 மணியளவில் நம்பெருமாளிடமிருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள், மாலைகளால் உச்சாத்து அலங்காரம், பின்னா் கோஷ்டி, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொது ஜனச் சேவை நடைபெற்றது.

திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். வெள்ளிக்கிழமை இயற்பாவுடன் விழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் உதவி ஆணையா் கு. கந்தசாமி ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com