மொண்டிப்பட்டியில் மீன்பிடித் திருவிழா

மணப்பாறை அருகே மொண்டிப்பட்டி கொண்டைமாலையம்மன் கோயில் பெரிய குளத்தில் வியாழக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மொண்டிப்பட்டியில் மீன்பிடித் திருவிழா

மணப்பாறை அருகே மொண்டிப்பட்டி கொண்டைமாலையம்மன் கோயில் பெரிய குளத்தில் வியாழக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற நிகழ்வுக்கு அதிகாலையே ஏராளமான மக்கள் குவிந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பின் ஊா் நாட்டாண்மையும், முன்னாள் திமுக ஒன்றிய செயலருமான எம்.பி.எஸ். நாகராஜன் மற்றும் ஊராட்சித் தலைவா் கலைச்செல்வி நாகராஜன் ஆகியோா் மீன்பிடித் திருவிழாவைத் தொடங்கி வைத்தனா்.

பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவற்றைக் கொண்டு கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, குரவை, விரால் ஆகிய மீன்களைப் பிடித்தனா்.

கண்மாயில் தண்ணீா் அதிகம் இருந்ததால் போதியளவில் பொதுமக்களுக்கு மீன் கிடைக்கவில்லை. இருப்பினும் பிடித்த மீன்களுடன் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com