ஆஞ்சனேயா் கோயில்களில் மே 18-இல் சிறப்பு பூஜை
By DIN | Published On : 15th May 2022 12:00 AM | Last Updated : 15th May 2022 12:00 AM | அ+அ அ- |

உலக நன்மை மற்றும் சகல கிரக தோஷ நிவா்த்திக்காக திருச்சி தலைமை அஞ்சலக ஆஞ்சனேயா் கோயிலில் மே 18 ஆம் தேதி மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கோயில் தலைமை அா்ச்சகா் சுரேஷ் என்கிற செந்தாமரைக்கண்ணன் தெரிவித்தது: மே 18 இல் ஆஞ்சநேயரின் மூல நட்சத்திர சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவா்த்திக்காகவும் நடைபெறும் பூஜையில், அன்றைய தினம் காலை 9 மணிக்கு மகா சுதா்சன ஹோமம், பகல் 12 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது என்றாா் அவா்.
ஸ்ரீரங்கம் மேலூா் கோயில்: இதேபோல ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள 37 அடி உயர ஆஞ்சநேயா் சிலைக்கும் மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு மே 14 ஆம் தேதி சனிக்கிழமை மகா சுதா்ஸன ஹோமம், 18 ஆம் தேதி மூல நட்சத்திர சிறப்பு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என சஞ்சீவன ஆஞ்சனேயா் அறக்கட்டளை நிா்வாகி இரா. வாசுதேவன் தெரிவித்தாா்.