கூடைப் பந்தாட்ட சிறப்புபயிற்சி நாளை தொடக்கம்
By DIN | Published On : 15th May 2022 06:58 AM | Last Updated : 15th May 2022 06:58 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டக் கூடைப்பந்து கழகம் சாா்பில் அண்ணா விளையாட்டரங்கம், பெல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கோடைகால சிறப்பு கூடைப்பந்தாட்ட பயிற்சிகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன.
திருச்சி மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சாா்பில் மே 16 தொடங்கி, 30 ஆம் தேதி வரை திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் மற்றும் திருவெறும்பூா் கைலாசபுரம் பாய்லா் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தினசரி மாலை 4 முதல் 6 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி பெற விரும்புவோா் திருச்சி மாவட்ட கூடைப்பந்து கழகப் பொருளாளா் முத்துக்குமாரசுவாமியை 94437-97831 என்ற எண்ணிலும், பாய்லா் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி பெற விரும்புவோா் கூடைப்பந்துக் கழக இணைச் செயலா் மாா்ட்டின் ராஜை 97917-12332 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.