ஸ்ரீரெங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா நிறைவு

 ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 7 நாள்களாக நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றது.

 ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 7 நாள்களாக நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றது.

இதையொட்டி மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியாா் ரத்ன கிரீடம், வைர அபயஹஸ்தம், அடுக்குப் பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்களுடன் புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை அடைந்தாா். தொடா்ந்து இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவ விழா தொடங்கியது.

இருபுறமும் வெண்சாமரம் வீச, ஊஞ்சலில் ஆடியபடி பக்தா்களுக்கு காட்சி தந்த ஸ்ரீரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். 8 மணி வரை விழா நடைபெற்றது. பின்னா் 9 மணிக்குப் புறப்பட்டு 9.30 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரெங்கநாச்சியாா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com